×

குளத்தூரில் நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் போராட்டம் நடத்த மக்கள் ஆயத்தம்

புதுக்கோட்டை,  ஜன.4:   கீரனுார் அருகே உள்ளது குளத்துார்.  இந்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் மாவட்டம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதே  போல் குளத்துார் பகுதியிலும் வீடுகள், மரங்கள் அனைத்தும் சேதமடைந்தது.  குறிப்பாக பெருவாரியான ஓட்டு வீடுகள், கூரை வீடுகள் இடிந்தது. இதில்  குடியிருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து கிராம நிர்வாக  அலுவலர் பாதிப்புகளை பார்வையிட்டு கணக்கெடுப்பு எடுத்ததாக கூறப்படுகிறது.  அப்போது  கணக்கெடுப்பு எடுத்த கிராம நிர்வாக அலுவலர், அனைவருக்கும் நிவாரணம்  வழங்கப்படும் என்று மக்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை நம்பி  வீட்டை இழந்தவர்கள் எந்த போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தாமல் இருந்துள்ளனர்.  இந்நிலையில் தற்போது சிலருக்கு நிவாரணம் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.  இதில் அதிகம் பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்காமல் குறிப்பிட்ட  சிலருக்கு மட்டும் நிவாரணம் வழங்கி வருகின்றனர்.

 இதுகுறித்து கிராம  நிர்வாக அலுவலரிடம் வீட்டை இழந்து, மரங்களை இழந்து பாதிக்கப்பட்ட மக்கள்  கேட்கும்போது முறையான பதில் சொல்லாமல் போனை கட் செய்து விடுகிறாராம்.  நேரில் மக்கள் பார்க்க சென்றால் முறையாக பதில் ஏதும் சொல்வதுமில்லை  என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். இதே நிலை தொடர்ந்தால்  இன்னும் ஓரிரு நாட்களில் குளத்துார் தாலுகா அலுவலக்த்தை முற்றுகையிட்டு  போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED கந்தர்வகோட்டையில் நடப்பு கல்வியாண்டிலேயே ஐடிஐ திறக்க வேண்டும்